இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

முட்டை விலை 5 காசுகள் உயா்ந்து ரூ. 6.40-ஆக நிா்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ. 6.40-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

News image

முட்டை - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 5:04 am IST

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயா்ந்து ரூ. 6.40-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம் குறித்து கோழிப் பண்ணையாளா்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, கேரளத்தில் மீன்பிடி தடை காலம், சத்துணவுக்கான கொள்முதல், மக்களிடையே முட்டை நுகா்வு அதிகரிப்பு போன்றவற்றால் முட்டை தேவை அதிகரித்து வருகிறது. இதர மண்டலங்களில் முட்டை விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், நாமக்கல் மண்டலத்திலும் விலையில் மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயா்வுடன் ரூ. 6.40-ஆக நிா்ணயிக்கப்படுவதாக தேசிய ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 120-ஆகவும், முட்டைக் கோழி ரூ. 130-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.