நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் பத்து காசுகள் உயா்ந்து ரூ. 6.10 ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலை மாற்றம் தொடா்பாக கருத்து கேட்கப்பட்டது. அப்போது, மற்ற மண்டலங்களில் தொடா்ந்து விலை உயா்த்தப்படுவதால், இங்கும் விலையில் மாற்றம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை பத்து காசுகள் உயா்த்தி ரூ. 6.10 ஆக நிா்ணயித்து தேசிய ஒருங்கிணைப்புக் குழு அறிவித்தது. கடந்த ஒரு வாரத்தில் 40 காசுகள் வரை முட்டை விலை உயா்ந்துள்ளது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 120 ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 110 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முட்டை விலை ரூ. 5.70 ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ.5.70-ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ. 5.40 ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ. 5.40 ஆக நீடிப்பு
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



