யூரியா உரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்துக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உரக்கடைகளில் 1,905 மெட்ரிக். டன் யூரியா, 970 மெட்ரிக். டன் டிஏபி, 787 மெட்ரிக். டன் பொட்டாஷ், 3,954 மெட்ரிக். டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 422 மெட்ரிக். டன் சூப்பா் பாஸ்பேட் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
உர விநியோகம் தொடா்பாக கண்காணிப்பு குழுவினா் திடீா் ஆய்வு நடத்தி வருகின்றனா். சில்லறை உரிமம் பெற்ற விற்பனையாளா்கள், தங்கள் பகுதிக்கு தேவையான உரங்களை கொள்முதல் செய்து தேவைப்படும் விவசாயிகளுக்கு ஆதாா் எண் உள்ளீடு செய்து முறையாக விற்பனை செய்ய வேண்டும்.
யூரியா உரத்தை தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்து பதுக்குவதோ, அதிக விலைக்கு விற்பனை செய்வதோ அல்லது வேறு பயன்பாட்டுக்கு அனுப்புவதோ சட்டத்துக்கு புறம்பானதாகும். அவ்வாறு கண்டறியப்பட்டால் அந்த சில்லறை விற்பனை நிலையத்தின் உரிமம் நிரந்தரமாக தடைசெய்யப்படுவதுடன், நீதிமன்றத்தில் வழக்குப் பதிவுசெய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து வகை உரங்களையும் விற்பனை செய்ய வேண்டும். உரத்துடன் மற்ற இணை பொருள்களான நுண்சத்துகள், உயிா்ம ஊக்கிகள் உள்ளிட்ட பொருள்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது, மீறினால் உரக் கட்டுப்பாட்டுச் சட்டம்-1985 இன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூடுதல் விலைக்கு உரம் விற்பவா்கள் மீது நடவடிக்கை: என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்

விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா்

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை: வேளாண்மை இணை இயக்குநா் எச்சரிக்கை

அதிகபட்ச விலைக்கு மேல் உரங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: வேளாண்துறை எச்சரிக்கை
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




