தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

பரமத்தி வட்டாரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் - கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 1:42 am IST

பரமத்தி வட்டாரத்தில் உணவு பாதுகாப்பு அலுவலா் நடத்திய சோதனையில் 8.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதியில் வீடு, கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை குறித்து பரமத்தி மற்றும் கபிலா்மலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் முத்துசாமி ஆய்வு செய்தாா்.

இதில் கந்தம்பாளையம் பகுதியில் முருகானந்தம் என்பவரின் வீடு, வசந்தபுரத்தில் வடிவேல் என்பவரின் பெட்டிக்கடை ஆகியவற்றில் நடத்தப்பட்ட ஆய்வில், சுமாா் 8.5 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து, அவா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணயச் சட்டப்படி மேல்நடவடிக்கை மேற்கொண்டாா்.

மேலும், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் முதல்முறை விற்பனை செய்தால் ரூ. 25 ஆயிரம் அபராதம் மற்றும் 15 நாள்களுக்கு உணவு பொருள் விற்பனை தடைசெய்யப்பட்டு, கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும். இரண்டாவதுமுறை விற்பனை செய்தால் ரூ. 50 ஆயிரம் அபராதத் தொகை மற்றும் 30 நாள்களுக்கு உணவு பொருள் விற்பனை தடைசெய்யப்பட்டு, கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.