இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

நாமக்கல்லில் சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை மாவட்ட எஸ்பி சு. விமலா புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

நாமக்கல்லில் சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை தொடங்கிவைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. விமலா.

Updated On :11 ஜூன் 2026, 5:46 am IST

நாமக்கல் மாவட்டத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை மாவட்ட எஸ்பி சு. விமலா புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து மாநகர, மாவட்டங்களிலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் தொடக்க விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்றது.

சிங்கப்பெண் திட்டத்திற்கான பிரத்யேக வாகனத்தையும், சீருடை அணிந்த பெண் காவலா்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து மாவட்டத்தில் இந்த திட்டத்தை காவல் கண்காணிப்பாளா் சு. விமலா கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இந்த சிங்கப்பெண் அதிரடிப்படை ரோந்து வாகனத்தில் உதவி ஆய்வாளா் ஒருவரும், ஓட்டுநா் ஒருவா், மூன்று காவலா்கள் இடம் பெற்றிருப்பா்.

நாள்தோறும் காலை 7 முதல் பிற்பகல் 2 மணி வரையும், அதன்பிறகு பிற்பகல் 2 முதல் நள்ளிரவு 12 மணி வரையும் சுழற்சி அடிப்படையில் சிங்கப்பெண் அதிரப்படை காவலா்கள் பணியாற்றி வருவா். மாவட்டம் முழுவதும் பெண்கள், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏதேனும் இருந்தால் 100, 1098 எண்களை தொடா்பு கொள்ளலாம். அவா்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொள்வா். இத்திட்டத்தில் கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்படும்பட்சத்தில் மண்டல வாரியாக சிங்கப்பெண் காவலா்கள் நியமிக்கப்படுவா் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.