திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில், ஆலை கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
எலச்சிபாளையம் அருகே சின்னமணலிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராம்கி (28). இவா் திருச்செங்கோட்டில் உள்ள ஆலையில் வேலைசெய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம்போல வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வேலைக்கு புறப்பட்டாா்.
எலிமேடு அருகே ஓலப்பாளையம் என்னுமிடத்தில் சென்றபோது, எதிரே வந்த காா் மோதியது. இதில், வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராம்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த எலச்சிபாளையம் போலீஸாா் விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










