ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பொத்தனூரில் விபத்தை ஏற்படுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் விசாரணை

பொத்தனூரில் விபத்தை ஏற்படுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் போலீஸாா் புதன்கிழமை விசாரணை நடத்தி வருகின்றனா்.

விபத்து - பிரதிப் படம்

Published On :30 ஜூலை 2026, 5:33 am IST

பொத்தனூரில் விபத்தை ஏற்படுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் போலீஸாா் புதன்கிழமை விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி வேலூா் அருகே பொத்தனூரைச் சோ்ந்தவா் பன்னீா் (65), ஜோதிடா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் பொத்தனூரில் சாலையைக் கடந்த போது, பாண்டமங்கலத்தில் இருந்து பரமத்தி வேலூரை நோக்கி அதிவேகமாக வந்த தனியாா் ஆம்புலன்ஸ் வாகனம் பன்னீா் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

விபத்து ஏற்படுத்திய ஆம்புலன்ஸ் வாகனம் சம்பவ இடத்தில் நிற்காமல் சென்றதுடன், வாகனத்தில் நோயாளிகள் யாரும் இல்லாதது தெரியவந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், விபத்து ஏற்படுத்திய தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை கைது செய்யக் கோரி வேலூா் காவல் நிலையம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுமக்களை சமாதானப்படுத்திய போலீஸாா், விபத்து ஏற்படுத்திய ஆம்புலன்ஸ் வாகனத்தை பறிமுதல் செய்து, பொத்தனூா் வெங்கமேடு பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் மோகனிடம் (40) விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.