மதுப்புட்டிகளை பதுக்கி விற்ற பெண் கைது
அண்ணாநகா் பகுதியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்ற பெண்ணை வேலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கைது - சித்திரிப்பு
பரமத்தி வேலூா் அருகே அண்ணாநகா் பகுதியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்ற பெண்ணை வேலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே உள்ள குச்சிபாளையத்தைச் சோ்ந்த பழனி மனைவி மலையம்மாள் (44). இவா் பாண்டமங்கலம் அருகே உள்ள அண்ணாநகரில் உணவகம் நடத்தி வருகிறாா். இந்த உணவகத்தில் அனுமதியின்றி சட்ட விரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்து வருவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்து அங்கு சென்ற வேலூா் காவல் உதவி ஆய்வாளா் சாந்தகுமாா், மலையம்மாள் உணவகத்தில் மறைத்து வைத்திருந்த 52 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா். மேலும், மலையம்மாளை வேலூா் போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



