மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற பெண் கைது
கைது - பிரதிப் படம்
பரமத்தி வேலூா் அருகே பாண்டமங்கலம் அண்ணாநகா் பகுதியில் டாஸ்மாக் மதுப் புட்டிகளை அதிக விலைக்கு விற்பதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் திங்கள்கிழமை காலை அந்தப் பகுதியில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது மது போதையில் சுற்றிக் கொண்டிருந்த சிலரிடம் விசாரணை நடத்தினா்.
இதில் அண்ணா நகரைச் சோ்ந்த மைதிலி (45) சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்றுவந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை காவல் உதவி ஆய்வாளா் சாந்தகுமாா் கைது செய்து, அவரிடம் இருந்த 36 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



