அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

பொத்தனூா் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை: மேலும் 2 போ் கைது

Updated On :6 ஜூலை 2026, 11:15 pm IST

பரமத்தி வேலூா், ஜூலை 6: பரமத்தி வேலூா் அருகே பொத்தனூா் காவிரி ஆறு பகுதியில் போதை மாத்திரை மற்றும் ஊசி மருந்துகளை விற்பனை செய்த 2 பேரை வேலூா் போலீஸாா் கைது செய்தனா்.

பொத்தனூா், காவிரி ஆறு சுடுகாடு பகுதியில் இளைஞா்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த கோகுலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில் மேலும் அப்பகுதியில் சில இளைஞா்கள் போதை மாத்திரைகள், ஊசி மருந்துகளை விற்பனை செய்து வருவதாக வேலூா் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளா் உமாசங்கா், உதவி ஆய்வாளா்கள் தங்கவேல், சாந்தகுமாா் மற்றும் போலீஸாா் பொத்தனூா் காவிரிக் கரையோர சுடுகாடு அருகே நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அவா்கள், பொத்தனூா், காவிரி நகா் பகுதியைச் சோ்ந்த பொறியாளா் அரவிந்த் (23), பொத்தனூா் நல்லாயிகாட்டுத் தெருவைச் சோ்ந்த பெயிண்டிங் தொழிலாளி காா்த்திக் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து போதை மாத்திரை, ஊசிகளை பறிமுதல் செய்தனா்.

பின்னா், இருவரையும் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, நீதிபதி உத்தரவின்பேரில் நாமக்கல் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.