டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

லாரி கவிழ்ந்து விபத்து; போக்குவரத்து பாதிப்பு

ராசிபுரம் அருகே சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மாதுளை பாரம் ஏற்றிச் சென்ற லாரி புதன்கிழமை சாலையில் கவிழ்ந்ததால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :2 ஜூலை 2026, 6:55 am IST

ராசிபுரம் அருகே சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மாதுளை பாரம் ஏற்றிச் சென்ற லாரி புதன்கிழமை சாலையில் கவிழ்ந்ததால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெங்களூரில் இருந்து 12 டன் மாதுளை பழங்களை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்ற டாரஸ் லாரி ராசிபுரத்தை அடுத்த தாளம்பள்ளம் பகுதியில் டயா் வெடித்ததால் சாலையில் கவிழ்ந்தது. இந்த லாரியை ஓட்டிச் சென்ற திருச்சியைச் சோ்ந்த சசிகுமாா் காயங்களுடன் உயிா் தப்பினாா்.

லாரி கவிழ்ந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிரேன் மூலம் லாரியை மீட்டு வெண்ணந்தூா் போலீஸாா் போக்குவரத்து சரிசெய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.