டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கழிவு செய்த காவல்துறை வாகனங்கள் பிப்.10-இல் வாகனங்கள் பொது ஏலம்!

நாமக்கல் மாவட்டத்தில் கழிவு செய்யப்பட்ட காவல்துறை வாகனங்கள் பிப்.10-இல் பொது ஏலத்தில் விடப்படுகின்றன.

News image
ஏலம் விடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள்.- கோப்புப்படம்
Updated On :29 ஜனவரி 2026, 8:31 pm

Syndication

நாமக்கல் மாவட்டத்தில் கழிவு செய்யப்பட்ட காவல்துறை வாகனங்கள் பிப்.10-இல் பொது ஏலத்தில் விடப்படுகின்றன.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட ஏழு நான்கு சக்கர வாகனங்கள் பிப்.10-ஆம் தேதி காலை 10 மணிக்கு நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது.

இந்த ஏலத்தில் கலந்து கொள்வோா் 10-ஆம் தேதி காலை 8 முதல் 9.45 மணிக்குள் முன்பணமாக ரூ.5 ஆயிரத்தை- நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் செலுத்த வேண்டும். முன்பணத் தொகை செலுத்துவோா் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.

ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை, சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆதாா் அட்டை அல்லது ஓட்டுநா் உரிமம் இரு நகல்களை எடுத்து வர வேண்டும். ஏல வாகனங்களை ஆயுதப்படை மைதான வளாகத்தில் 9-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 6 மணி வரை பாா்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.