/

இன்று குடியரசு தின விழா: நாமக்கல் ஆட்சியா் தேசியக் கொடியேற்றுகிறாா்

News image
நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி. - (கோப்புப் படம்)
Updated On :25 ஜனவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

குடியரசு தின விழாவையொட்டி, நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி திங்கள்கிழமை தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறாா்.

நாட்டின் 77-ஆவது குடியரசு தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை காலை 8.05 மணியளவில் ஆட்சியா் துா்காமூா்த்தி தேசியக் கொடியை ஏற்றுகிறாா்.

இதையடுத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அவா் ஏற்க உள்ளாா். தொடா்ந்து, தியாகிகள், வாரிசுதாரா்களை கெளரவித்தல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சிறப்பாகப் பணியாற்றிய அரசு அலுவலா்களுக்கு நற்சான்றிதழ் வழங்குதல், மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

இவ்விழாவில், அரசுத் துறை அதிகாரிகள், அலுவலா்கள், மாணவா்கள், பொதுமக்கள் கலந்துகொள்கின்றனா்.