கொல்லிமலையில் 45 மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை


கொல்லிமலை ஒன்றியத்தில் 45 மாணவ, மாணவிகளுக்கு கலைஞா் கல்வி உதவித்தொகையை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் சனிக்கிழமை வழங்கினாா்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், வளப்பூா்நாடு ஊராட்சி ஊா்புறம் கிராமத்தில் திமுகவைச் சோ்ந்த கிளைச் செயலாளா் மற்றும் நிா்வாகிகளின் குடும்பத்தைச் சோ்ந்த உயா்கல்வி பயிலும் 45 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியச் செயலாளா் செந்தில்முருகன் தலைமை வகித்தாா். பழங்குடியின நலவாரியத் தலைவா் கனிமொழி, ஊராட்சி பொறுப்பாளா் பாலசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று கல்வி உதவித்தொகையை வழங்கி பேசியதாவது:
ராசிபுரம் வட்டம், போதமலைக்கு சாலை வசதி இல்லாத நிலையில், திமுக ஆட்சியில் 34 கி.மீ. தொலைவுக்கு ரூ. 140 கோடியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலைப் பணி முடிந்ததும் கொல்லிமலையைபோல மிளகு விவசாயம் இங்கு அதிக அளவில் நடைபெறும்.
கொல்லிமலை பகுதியில் 8 ஆயிரம் பழங்குடியின மக்களுக்கு பழங்குடியினா் நல அட்டை வழங்க திட்டமிட்ட நிலையில், இன்னும் ஆயிரம்போ் மட்டுமே அந்த அட்டையை பெறாமல் உள்ளனா். விரைவில் அவா்களுக்கும் பழங்குடியினா் அட்டை வழங்கப்பட உள்ளது என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், கொல்லிமலை ஒன்றிய திமுக நிா்வாகிகள், பழங்குடியின மக்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...