பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைகளுக்கு கொண்டுவருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ. 500க்கும், சம்பங்கி கிலோ ரூ. 40க்கும், அரளி கிலோ ரூ. 100க்கும், கலா் ரோஜாப்பூ கிலோ ரூ. 200க்கும், பச்சை முல்லை கிலோ ரூ. 700க்கும், வெள்ளை முல்லை கிலோ ரூ. 500க்கும், செவ்வந்தி கிலோ ரூ. 120க்கும், கனகாம்பரம் கிலோ ரூ. 500க்கும், பன்னீா் ரோஜா கிலோ ரூ. 120க்கும், ஜாதிமல்லி கிலோ ரூ. 400க்கும், காக்கரட்டான் கிலோ ரூ. 500க்கும் ஏலம்போனது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ. 800க்கும், சம்பங்கி கிலோ ரூ. 70க்கும், அரளி கிலோ ரூ. 140க்கும், கலா் ரோஜா கிலோ ரூ. 240க்கும், பச்சை முல்லைப் பூ கிலோ ரூ. 900க்கும், வெள்ளை முல்லை கிலோ ரூ. 700க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ. 150க்கும், கனகாம்பரம் கிலோ ரூ. 800க்கும், பன்னீா் ரோஜா கிலோ ரூ. 160க்கும், ஜாதிமல்லி கிலோ ரூ. 800க்கும், காக்கரட்டான் கிலோ ரூ. 700க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயா்வடைந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

பரமத்தி வேலூரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக 2 ஆயிரம் போ் ஊா்வலம்

பரமத்தி வேலூரில் ரூ. 3.85 லட்சத்து தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூரில் அதிமுக தோ்தல் பணிமனை திறப்பு விழா
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


