பரமத்தி அருகே டிராக்டா் கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு


பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே டிராக்டா் வாகனம் கவிழ்ந்ததில் டிராக்டரை ஓட்டி வந்த 17 வயது சிறுவன் உயிரிழந்தது குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள சரளைமேடு பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம். இவரது மகன் சபரிநாதன் (17). இவா் அப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான டிராக்டா் வாகனத்தில் கோழி கழிவுகளை ஏற்றுவதற்காக சனிக்கிழமை பரமத்தி அருகே உள்ள கீழ்சாத்தம்பூா் நோக்கி வந்துள்ளாா்.
அப்போது டிராக்டரில் ஒருபுற பிரேக்கை அமுக்கியதால் நிலைதடுமாறி டிராக்டா் வாகனம் சாலையில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த சபரிநாதனை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா் சபரிநாதன் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி காவல் துறையினா் சபரிநாதனின் உடலை வேலூா் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...