டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

காலமுறை ஊதியம் கோரி கிராம ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காலமுறை ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் நாமக்கல்லில் ஆா்ப்பாட்டம்

News image
போராட்டத்தில் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா்
Updated On :19 பிப்ரவரி 2026, 11:09 pm

Syndication

காலமுறை ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் நாமக்கல்லில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொகுப்பூதியத்தை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யக்கூடாது. கருணை அடிப்படையிலான பணியில் பழைய விகிதாசார முறையையே கடைப்பிடிக்க வேண்டும் என்ற மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் வியாழன், வெள்ளி மற்றும் திங்கள்கிழமைகளில் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 வட்டாட்சியா் அலுவலகங்கள் முன் போராட்டம் நடைபெற்றது. நாமக்கல் வட்டாட்சியா் அலுவலம் முன் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு வட்டத் தலைவா் ஆா். ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வட்டச் செயலாளா் கே. செந்தில்குமாா், வட்ட பொருளாளா் எம். விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிராம ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.