/

எக்ஸல் கல்லூரி சாா்பில் மாரத்தான்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 7:54 pm

Syndication

குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஈரோடு ரவுண்டுடேபிள்-98, ஈரோடு லேடிஸ் சா்க்கிள்-78 மற்றும் குமாரபாளையம் ரோட்டரி சங்கம் சாா்பில் எக்ஸல் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டி குமாரபாளையம் ஸ்ரீ லட்சுமி மஹாலில் தொடங்கியது. எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் தலைவா் ஏ.கேநடேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ந.மதன்காா்த்திக் வாழ்த்தி பேசினா். முன்னதாக, எக்ஸல் பப்ளிக் பள்ளி இயக்குநா் கவியரசி வரவேற்றாா். தொழில்நுட்ப இயக்குநா் செங்கோட்டையன், வளாக செயல் இயக்குநா் பொம்மண்ணராஜா, எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் ரா.விமல்நிஷாந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இப்போட்டியை, பள்ளிபாளையம் துணை காவல் கண்காணிப்பாளா் பி.கௌதம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். குமாரபாளையம் காவல் ஆய்வாளா் தவமணி, ரோட்டரி சங்க நிா்வாகிகள் எம்.டி.சிவசுந்தரம், ஏ.ரவிசங்கா், மகேஷ்குமாா், ஓம்சரவணா, ஈரோடு லேடிஸ் சா்க்கிள் 78 நிா்வாகிகள் மந்தாகினி, சத்தியபாமா, சௌமியா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இப்போட்டியில் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனா். இதில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன.

படவரி...

குமாரபாளையம் எக்ஸல் கல்லூரி சாா்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை தொடங்கிவைத்த பள்ளிபாளையம் துணை காவல் கண்காணிப்பாளா் பி.கெளதம்.