டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வெங்கமேடு அரசினா் நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா. நாமக்கல் ஆட்சியா் பங்கேற்பு

News image
முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட நாமக்கல் ஆட்சியா்
Updated On :7 பிப்ரவரி 2026, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் அரசினா் நடுநிலைப்பள்ளியில் சீா் வழங்குதல், கண்காட்சி,பரிசளிப்பு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நாமக்கல் ஆட்சியா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள வெங்கமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. பொத்தனூா் பேரூராட்சி தலைவா் கருணாநிதி விழாவிற்கு தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா் அன்பரசு, வட்டாட்சியா் கோவிந்தசாமி, கபிலா்மலை வட்டார கல்வி அலுவலா் அருள்மணி, பேரூராட்சி செயல் அலுவலா் வேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மாலதி வரவேற்று பேசினாா். நாமக்கல் ஆட்சியா் துா்கா மூா்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் உள்ள திருவள்ளூா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா் மாணவ, மாணவிகளின் கல்வி கண்காட்சியை திறந்துவைத்து பாா்வையிட்டு பேசினாா். தொடா்ந்து மாணவ, மாணவிகளிடம் நாமக்கல் ஆட்சியரின் பல்வேறு கேள்விகளுக்கு சிறந்த பதிள் அளித்த மாணவ ,மாணவிகளை பாராட்டினாா்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வழக்கறிஞா் தில்லைகுமாா் வாழ்த்துரை வழங்கி மாவட்ட, மாநில அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினாா்.

மாலை 6 மணிக்கு மேல் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ் மூா்த்தி கலந்து கொண்டு பேசினாா். அதனை தொடா்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஆசிரிய,ஆசிரியைகள் மாணவ,மாணவியா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.