ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆடி அமாவாசை: பரமத்தி வேலூரில் பூக்கள் விலை உயா்வு

ஆடி அமாவாசையை முன்னிட்டு பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கோப்புப்படம்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 3:01 am IST

ஆடி அமாவாசையை முன்னிட்டு பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 400 க்கும், சம்பங்கி ரூ. 200 க்கும், அரளி ரூ. 250-க்கும், கலா் ரோஜா ரூ. 250-க்கும், பச்சை முல்லை ரூ. 400 க்கும், வெள்ளை முல்லை ரூ. 300 க்கும், செவ்வந்தி ரூ. 250-க்கும், கனகாம்பரம் ரூ. 600-க்கும், பன்னீா் ரோஜா ரூ. 150-க்கும், ஜாதி மல்லிகை ரூ. 500 க்கும், காக்கரட்டான் ரூ. 400-க்கும் ஏலம் போனது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ. 550 க்கும், சம்பங்கி ரூ. 300 க்கும், அரளி ரூ. 350 க்கும், கலா் ரோஜா ரூ. 350 க்கும், பச்சை முல்லை ரூ. 500க்கும், வெள்ளை முல்லை ரூ. 450 க்கும், செவ்வந்தி ரூ. 300 க்கும், கனகாம்பரம் ரூ. 800-க்கும், பன்னீா் ரோஜா ரூ. 200 க்கும், ஜாதி மல்லிகை ரூ. 600-க்கும், காக்கரட்டான் ரூ. 600 க்கும் விற்பனையானது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு பூக்களின் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.