ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆடி அமாவாசை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் ருத்ர பாதத்தில் தர்ப்பணம் கொடுத்து ஏராளமானோர் வழிபாடு செய்தனர்.

ருத்ர பாதத்தில் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்ட பக்தர்கள்

Published On :12 ஆகஸ்ட் 2026, 8:35 am IST

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் ருத்ர பாதத்தில் தர்ப்பணம் கொடுத்து ஏராளமானோர் வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர மூர்த்தியும், நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் அக்னி, சூரியன், சந்திரன் என மூன்று புனிதத் தீர்த்தங்கள் உள்ளன.

சந்திர தீர்த்தக்குளம் அருகே பித்துருக்கள் உலகத்தின் தலைவர் என போற்றப்படும் ருத்ரனின் பாதம் அமைந்துள்ளது. இந்த ருத்ர பாதத்தில் பித்ருக்கள், மூதாதையர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்து சந்திர தீர்த்த குளத்தில் நீராடி வழிபாடு செய்தால் 21 ஜென்ம பாவங்கள் அகலும் என்பது ஐதீகம்.

இந்த நிலையில், இன்று (ஆக. 12) ஆடி அம்மாவாசையை முன்னிட்டு ருத்ரபாதம் மண்டபத்தில் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே தர்ப்பணம் கொடுக்க வருகை தந்தனர்.

அதைத் தொடர்ந்து மண்டபத்தை சுற்றிலும் பக்தர்கள் அமர்ந்து குருக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்தும், பலி கர்ம பூஜை செய்தும் வழிபாடு செய்தனர். தொடர்ந்து கோவிலில் சுவாமி அம்பாளை வழிபட்டனர்.

Summary

On the occasion of Aadi Amavasai, a large number of people offered *Tharpanam* and worshipped at the Rudra Padam of the Thiruvenkadu Swetharanyeswarar Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.