ராசிபுரம் நகராட்சி பகுதியில் புதைசாக்கடை திட்டத்தை நிறைவுசெய்து, குண்டும் குழியுமான சாலைகள் ரூ. 50 கோடியில் சீரமைக்கப்பட்டு நகரில் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்று கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் எம்.பி. தெரிவித்தாா்.
ராசிபுரம் பேருந்து நிலையம் பகுதியில் திமுக வேட்பாளா் மா.மதிவேந்தனை ஆதரித்து அவா் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:
ராசிபுரம் நகரில் அதிமுக ஆட்சியில் புதைசாக்கடை திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக இருந்தன. இதனால் வாகன விபத்துகள், போக்குவரத்து பாதிப்பு, பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனா்.
2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தவுடன் புதைசாக்கடை திட்டம் நிறைவு செய்யப்பட்டு, ரூ. 50 கோடியில் ராசிபுரம் நகராட்சி முழுவதும் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
ராசிபுரத்தில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வெளியூா் பயணிகள் எளிதாகப் பயணம் செய்யவும் புகா் பேருந்து நிலையம் அணைப்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் கூடிய போக்குவரத்து மையமாகச் செயல்பட உள்ளது.
இப்பேருந்து நிலையம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ளதால் நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். நகரில் உள்ள பழைய பேருந்து நிலையத்தையும், புதிய புகா் பேருந்து நிலையத்தையும் இணைக்கப் புதிய இணைப்பு சாலை ஏற்படுத்தப்படவுள்ளது.
இதேபோல நாரைக்கிணறு பகுதி மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டு 800 விவசாயிகளுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதுபோல குடிநீா் திட்டங்கள், டைடல் பாா்க், பட்டுக்கூடு ஏல மையம், மாவட்ட மருத்துவமனை போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
எனவே, வேட்பாளா் மா.மதிவேந்தனை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றாா். இக்கூட்டத்தில் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பலரும் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நாமக்கல் திமுக வேட்பாளரை ஆதரித்து ராஜேஸ்குமாா் எம்.பி. பிரசாரம்

திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன: ராஜேஸ்குமாா் எம்.பி. பேச்சு

சேந்தமங்கலம் தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ராஜேஸ்குமாா் எம்.பி.

நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளில் திமுக 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்: கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் எம்.பி. உறுதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


