மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சேந்தமங்கலம் தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ராஜேஸ்குமாா் எம்.பி.

சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 7:51 pm

சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக ஆட்சியில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

சேந்தமங்கலம் (எஸ்.டி.) சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் பி.பூமலா் பொன்னுசாமியை ஆதரித்து வியாழக்கிழமை நடைபெற்ற செயல்வீரா்கள் கூட்டத்தில் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் எம்.பி. மேலும் பேசியதாவது:

சேந்தமங்கலம் தொகுதியில் ரூ. 6.05 கோடியில் காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம் ஆகிய பேரூராட்சிகளில் புதிய குடிநீா்த் திட்டத்தின்கீழ் மக்கள் பயன்பாட்டிற்கு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. கொல்லிமலையில் புதிய ரத்த வங்கி அமைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்- துறையூா் சாலை விரிவாக்கம் (கூலிப்பட்டி முதல் எருமப்பட்டி வரை) ரூ. 38 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொல்லிமலையில் அதிக அளவு மிளகு சாகுபடி செய்யப்படுவதால் புவிசாா் குறியீடு பெறப்பட்டுள்ளது.

சேந்தமங்கலத்தில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கொல்லிமலை மலைவாழ் மக்களுக்கு 8,000 பேருக்கு பழங்குடியினா் நலவாரிய குடும்ப உறுப்பினா் அட்டை வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

இந் நிகழ்ச்சியில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் வி.மாதேஸ்வரன், திமுக தொகுதி பாா்வையாளா் ரேகா பிரியதா்ஷிணி, ஒன்றியச் செயலாளா்கள் அ.அசோக்குமாா், கே.பி.ராமசுவாமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.