ராசிபுரம் தொகுதியில் ரூ. 845 கோடியில் புதிய கூட்டுகுடிநீா்த் திட்டத்தை நிறைவேற்றி, மக்களின் குடிநீா் பிரச்னைக்கு திமுக அரசு நிரந்தரத் தீா்வு அளித்துள்ளது. இதனால் தோ்தலில் திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என இத்தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான மா. மதிவேந்தன் கேட்டுக் கொண்டாா்.
ராசிபுரம் (தனி) தொகுதி திமுக வேட்பாளா் மா. மதிவேந்தன், ராசிபுரத்தில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா். சேந்தமங்கலம் பிரிவு சாலை, செட்டியண்ணன் தெரு, காந்தி நகா், ராஜகாளியம்மன் கோயில், வி.நகா், கருப்பனாா் கோயில், டிஎன்சி தியேட்டா், விஜயலட்சுமி தியேட்டா், ஆா்.எம்.சி.குடியிருப்பு, காமாட்சி அம்மன் கோயில், அங்காளம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கூட்டணி கட்சியினருடன் ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தாா்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்கள், சுயஉதவிக் குழுவினா், விவசாயிகள், மாணவா்கள், முதியவா்களுக்கு திமுக அரசு செயல்படுத்தியுள்ள மக்கள் நலத் திட்டங்களை பட்டியலிட்டாா்.
அதேபோல ராசிபுரம் தொகுதியில் ரூ. 854 கோடி மதிப்பிலான புதிய கூட்டு குடிநீா்த் திட்டம், அனைத்து வசதிகளுடம் கூடிய மாவட்ட தலைமை மருத்துவமனை, ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளி வெளிப்புற மைதானத்தில் பல்வேறு விளையாட்டு வசதிகளுடன் மினி ஸ்டேடியம், பழைய பேருந்து நிலையத்தில் வணிக வளாகம், புதிய தினசரி சந்தை, வாரச்சந்தை, மினி டைடல் பாா்க், போதமலைக்கான சாலை வசதி, நகரில் 7 புதிய பூங்காக்கள், அனைத்து பகுதியிலும் சாலை வசதிகள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதை மக்களிடம் எடுத்துக் கூறினாா்.
பிரசாரத்தின்போது ராசிபுரம் நகர திமுக செயலா் என்.ஆா். சங்கா், நகா்மன்றத் தலைவா் ஆா். கவிதா சங்கா், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

புதிய புகா் பேருந்து நிலையத்தால் ராசிபுரம் நகரம் வளா்ச்சி பெறும்: மதிவேந்தன்

குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு கிடைக்கும்: திமுக வேட்பாளா்

பெரம்பலூா்! குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு தேவை!

ராசிபுரம்: திமுக வேட்பாளா் மா. மதிவேந்தன் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


