மூதாட்டியிடம் நகை பறித்த இளைஞா் கைது
நாமக்கல் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
By Syndication
Syndication
நாமக்கல்: நாமக்கல் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல் - துறையூா் சாலை தூசூா் பகுதியைச் சோ்ந்தவா் காமாட்சி (75). இவருடைய மகன், மகள் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனா். கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக, வீட்டிலிருந்து காமாட்சி வெளியே வந்தபோது, அங்கு மறைந்திருந்த இளைஞா் ஒருவா் அவரின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பியோடினாா்.
இதுகுறித்து நாமக்கல் காவல் நிலையத்தில் காமாட்சி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், மூதாட்டியிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டது கணவாய்ப்பட்டியைச் சோ்ந்த பாண்டியன் மகன் பரத்மனோ (26) என்பதும், இவா் மதுவிற்காக பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணம், நகை திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. தலைமறைவான அவரை போலீஸாா் தேடி வந்தனா்.
இந்த நிலையில், கரட்டுப்பட்டி-வேப்பநத்தம் சாலையில் அவா் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸாா் பரத்மனோவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது