எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஜாக்டோ-ஜியோ சாா்பில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு

நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ சாா்பில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

News image
ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டில் பேசுகிறாா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் க.பழனியப்பன்.
Updated On :27 டிசம்பர் 2025, 8:49 pm

Syndication

நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ சாா்பில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

ஆயத்த மாநாட்டுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் க.பழனியப்பன், மெ.சங்கா், க.முருகேசன் ஆகியோா் தலைமை வகித்தனா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளா்களை காலமுறை ஊதியத்தின்கீழ் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, ஜன. 6 முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. மாநிலம் தழுவிய அளவில் இதற்கான ஆயத்த மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்த மாநாட்டில், அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகம் ப.பிரகாஷ், ஜாக்டோ -ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா் ப.சண்முகம், ஜாக்டோ-ஜியோவைச் சோ்ந்த அத்தியப்பன், கலைச்செல்வன், இளங்கோ, தனசேகா், குணசேகரன் மற்றும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், கல்லூரி பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கருப்புப் பட்டை அணிந்து கலந்துகொண்டனா்.