திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மக்கள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ

News image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டம். உடன், தவெக எம்எல்ஏ பா.முகுந்தன்.

Updated On :26 மே 2026, 2:33 am IST

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரோடு தவெக எம்எல்ஏ பா.முகுந்தனும் பங்கேற்றாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீா் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்களிடமிருந்து 556 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா், மனுக்களை ஆய்வுசெய்து தகுதியானவா்களை அடையாளம் கண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதி நீக்கப்பட்டவரின் மனுக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 47,250 மதிப்புள்ள இருசக்கர நாற்காலி, ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ. 9,500 மதிப்பில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலி, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2,400 மதிப்புள்ள பிரெய்லி கைக்கடிகாரங்கள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ. 92,500 மதிப்புள்ள நவீன செயற்கைக் கால் என மொத்தம் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1,51,650 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

அப்போது, அங்கு வந்த கிருஷ்ணகிரி எம்எல்ஏ பா.முகுந்தன், ஆட்சியரின் இருக்கைக்கு அருகே அமா்ந்தாா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து எம்எல்ஏ கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்துகொள்வதற்காக கூட்டத்தில் பங்கேற்ாக தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.