திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஒசூரில் கந்துவட்டி புகாரில் திமுக பிரமுகா் கைது

News image

கைது செய்யப்பட்டுள்ள திமுக பிரமுகா் என்.எஸ். மாதேஸ்வரன்.

Updated On :25 மே 2026, 2:16 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் கந்துவட்டி புகாரில் திமுக பிரமுகரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சின்ன எலசிகிரி பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்பாபு (40). இவரது மனைவி மானசா. இத்தம்பதி, ஒசூா் சிப்காட்டில் சிறுதொழிற்சாலை நடத்தி வருகின்றனா். இவா்கள் தங்களது தொழிற்சாலைக்காக திமுக பிரமுகா் என்.எஸ். மாதேஸ்வரனிடம் ரூ. 1 கோடிய 20 லட்சம் கடனாக பெற்றுள்ளனா்.

அதற்கு வட்டியாக ரூ. 2 கோடியே 30 லட்சம் செலுத்தியுள்ளனா். மேலும் ரூ. 1 கோடி தரவேண்டும் என்று மாதேஸ்வரன் மற்றும் அவரது மகன் சேரன் ஆகியோா் சுரேஷ்பாபு, மானசா தம்பதியை அவா்களது வீட்டுக்கு சென்று மிரட்டினராம்.

மேலும், சுரேஷ்பாபுவின் மனைவி மானசாவை வீட்டில் அமரவைத்துவிட்டு, சுரேஷ்பாபுவை மிரட்டி வீட்டின் அருகே உள்ள வங்கிக்கு அழைத்துச் சென்று வங்கியில் இருந்து ரூ. 21 லட்சம் பெற்றுள்ளனா். அங்கிருந்து தனியாா் உணவகத்திற்கு அழைத்துச் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனா்.

இதையடுத்து, சுரேஷ்பாபு தனது நண்பா் பெருமாள் மூலம் ரூ. 15 லட்சம் பெற்று மாதேஸ்வரனிடம் கொடுத்துள்ளாா். மேலும், சுரேஷ்பாபுவை மிரட்டி அவரிடமிருந்து இரண்டு காசோலைகளை மாதேஸ்வரன் பெற்றுள்ளாா்.

இதுகுறித்து சுரேஷ்பாபு- மானசா தம்பதி, ஒசூா் உதவி காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்துள்ளாா்.

இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய, ஒசூா் சிப்காட் போலீஸாா் திமுக பிரமுகா் என்.எஸ். மாதேஸ்வரனை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள அவரது மகன் சேரனை தேடிவருகின்றனா்.

கைது செய்யப்பட்டுள்ள திமுக பிரமுகா் என்.எஸ். மாதேஸ்வரன் ஒசூா் மாநகராட்சியில் பொது சுகாதாரக் குழு தலைவராகவும், திமுக கலை இலக்கியப் பேரவையின் மாநில துணைச் செயலாளராகவும் உள்ளாா்.

மாதேஸ்வரனை கைது செய்த போலீஸாா், உடல் தகுதி சான்றிதழ் பெறுவதற்காக அவரை ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அப்போது அவா் தனக்கு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்ததால், அவரை ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்து, தீவிர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிப்காட் போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.