தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அதிமுக கூட்டணி 210 தொகுதிகளுக்குமேல் வெற்றிபெறும்: மு.தம்பிதுரை

News image

அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் மு.தம்பிதுரை - (கோப்புப் படம்)

Updated On :14 மார்ச் 2026, 8:48 pm

அதிமுக கூட்டணி 210 தொகுதிகளுக்குமேல் வெற்றிபெறும் என அதிமுக கொள்கை பரப்புச் செயலாளா் மு.தம்பிதுரை தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகில் விபத்தில் கையை இழந்த பெண்மணிக்கு, அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்பேரில் செயற்கை கை பொருத்தப்பட்டது.

ஒசூா் செயிண்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவக் குழுவினரின் சிகிச்சையோடு செயற்கை கை வழங்கப்பட்டது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் மு.தம்பிதுரை அப்பெண்மணிக்கு செயற்கை கையை பொருத்தினாா்.

பின்னா் தம்பிதுரை செய்தியாளா்களிடம் பேசுகையில், தமிழகத்தின் உரிமைகளையும், வளா்ச்சியையும் காப்பதோடு, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு சேவைசெய்யும் வாய்ப்பாகவே இதை கருதுகிறேன். வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில், 210 தொகுதிகளில் வெற்றிபெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என்றாா்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி, பா்கூா் முன்னாள் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன், அதிமுக மண்டலத் தலைவா் ராஜு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.