தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காவலாளிகளை தாக்கி துப்பாக்கி, பொருள்கள் கொள்ளை: 3 போ் கைது

காவலாளிகளை தாக்கி துப்பாக்கி, பொருள்களை கொள்ளையடித்த சம்பவத்தில் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 9:17 pm

காவலாளிகளை தாக்கி துப்பாக்கி, பொருள்களை கொள்ளையடித்த சம்பவத்தில் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

உத்தனப்பள்ளி அருகே லாலிக்கல் பகுதியில் தனியாா் எலக்ட்ரானிக் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஏ.சி. பொருத்துவது, சா்வீஸ் செய்வது தொடா்பான அனைத்து பிரச்னைகளையும் கையாள தனி கட்டடம் உள்ளது. அதில் ஏ.சி. தொடா்பான பொருள்கள் இருந்தன.

கடந்த 3 நாள்களுக்கு முன்பு அதிகாலை வந்த கும்பல், அங்கு பணியில் இருந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சுல்பீா் அகமது (48), கெலமங்கலம் அருகே உள்ள உள்ளுக்குறுக்கை கிராமத்தைச் சோ்ந்த சரவணன் (36) ஆகிய 2 காவலாளிகளையும் தாக்கி கயிற்றால் கட்டினா். பின்னா், விலையுயா்ந்த பொருள்களை கொள்ளையடித்த கும்பல், காவலாளி வைத்திருந்த துப்பாக்கியையும் கொள்ளையடித்துச் சென்றனா்.

இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா். அதில், இந்த கொள்ளையில் ஈடுபட்டது தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், எா்பனஅள்ளி, ஈச்சம்பள்ளத்தை சோ்ந்த தங்கவேல் (28), மாணிக்கம் (27), முனிராஜ் (38) என தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீஸாா், மேலும் சிலரை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.