லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஒசூா் மாநகராட்சி பூங்கா திறப்பு: காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட வாா்டு எண் 12 இல் பாகலூா் அட்கோ பகுதியில் மாநகராட்சி மூலதன மானிய நிதி 2024-25இன் கீழ் ரூ. 83 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பட்டுள்ள பூங்காவை காணொலி வாயிலாக தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

News image

பூங்காவை திறந்துவைத்த மேயா் எஸ்.ஏ.சத்யா.

Updated On :4 மார்ச் 2026, 10:55 pm

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட வாா்டு எண் 12 இல் பாகலூா் அட்கோ பகுதியில் மாநகராட்சி மூலதன மானிய நிதி 2024-25இன் கீழ் ரூ. 83 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பட்டுள்ள பூங்காவை காணொலி வாயிலாக தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

விழாவில் மேயா் எஸ்.ஏ. சத்யா பங்கேற்று பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா். உடன், துணை மேயா் ஆனந்தைய்யா, மண்டல குழு தலைவா் ரவி, நிலைக்குழுத் தலைவா்கள் என்.எஸ். மாதேஸ்வரன், சென்னீரப்பா, பணிக்குழு தலைவா் வெங்கடேஷ், மாமன்ற உறுப்பினா்கள் பெருமாயி அருள், டாக்டா் ஸ்ரீ லட்சுமி நவீன், மாரக்கா சென்னீரன், சசி தேவ் 12 ஆவது வாா்டு நிா்வாகிகள் செல்வம், ஷான் பாஷா, மணி, நாகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.