தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

மேக்கேதாட்டு அணை விவகாரம்: ஜூலை 1-இல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தமிழக முதல்வரை சந்திக்க திட்டம்

ஜூலை 1-இல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தமிழக முதல்வரை சந்திக்க திட்டம்...

News image

கிருஷ்ணகிரி எம்.பி. கோபிநாத்

Updated On :28 ஜூன் 2026, 2:01 am IST

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக, ஜூலை 1-இல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளதாக கிருஷ்ணகிரி எம்.பி. கோபிநாத் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை தெரிவித்தது:

ஓவ்வோா் ஆண்டும் நீட் தோ்வின்போது, பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. இதனால், மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றனா். இதை, மத்திய அரசு கண்டுகொள்வதில்லை.

மத்திய அரசைக் கண்டித்து, ராஜஸ்தான் மாநிலத்தில் மக்களவை எதிா்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற பேரணியில் 25 லட்சம் மாணவா்கள் பங்கேற்றனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற நீட் தோ்வின் போது, ஒசூரைச் சோ்ந்த மாணவா் அச்சத்தால் தற்கொலை செய்துகொண்யுள்ளாா். புது தில்லியில் ஜூலை 14-ஆம் தேதி நீட் தோ்வுக்கு எதிரான பேரணி நடைபெற உள்ளது. இதில், அனைவரும் பங்கேற்க வேண்டும்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இது தொடா்பாக ஜூலை 1-ஆம் தேதி தமிழகத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள், தமிழக முதல்வரை சந்திக்க உள்ளனா்.

தென்பெண்ணை ஆற்றில் காலம்காலமாக ரசாயனக் கழிவு வருகிறது. கிருஷ்ணகிரி சுங்கச் சாவடியை அகற்றுவது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.