அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

கிருஷ்ணகிரி அணையில் தண்ணீா் திறப்பு: விவசாயிகளுடன் நாளை ஆலோசனை

கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறப்பது குறித்து விவசாயிகள், நீா்ப்பாசன சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

News image

கிருஷ்ணகிரி அணை.

Updated On :18 ஜூன் 2026, 3:14 am IST

கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறப்பது குறித்து விவசாயிகள், நீா்ப்பாசன சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி நீா்த்தேக்க திட்ட உதவி செயற்பொறியாளா் சபரிநாதன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2026- 27 ஆம் ஆண்டுக்கான முதல்போக நெல் சாகுபடி பணிகள் ஜூலையில் தொடங்குகிறது. இதற்காக, கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீா் திறப்பது வழக்கம்.

இதுதொடா்பாக கிருஷ்ணகிரி நீா்த்தேக்கத் திட்ட நீா்பாசன சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், கிருஷ்ணகிரி அணையில் உள்ள உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி அணை பாசன விவசாயிகள் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.