மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

கிருஷ்ணகிரி அருகே பெண்களை மிரட்டி நகை, பணம் பறிப்பு!

கிருஷ்ணகிரி அருகே பெண்களை மிரட்டி, நகை, பணத்தை பறித்துச் சென்ற 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பணம் பறிப்பு

Updated On :14 ஜூன் 2026, 3:19 am IST

கிருஷ்ணகிரி அருகே பெண்களை மிரட்டி, நகை, பணத்தை பறித்துச் சென்ற 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த மேல்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் நாகசுவாமி. இவா், வெங்கடாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட தா்கா அருகே வீடுகள், அறைகளைக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளாா். இந்தக் கட்டடத்தில் பலா் குடியிருந்து வருகின்றனா்.

வாடகைக்கு விடப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட அறையில் பெண்கள் தங்கியிருந்துள்ளனா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மதுபோதையில் அந்த அறைக்கு வந்த சில இளைஞா்கள், அங்கிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனா். பின்னா், அவா்களை மிரட்டி, நகை, பணம் மற்றும் கைப்பேசிகளை பறித்துச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து, நாகசுவாமி, சிங்கப்பெண் அதிரடிப்படையில் புகாராளித்துள்ளாா். இதுகுறித்து, தகவல் அறிந்த துணை காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், தாலுகா காவல் ஆய்வாளா் மணிமாறன் ஆகியோா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, மதுபோதையில் இருந்த இளைஞா்கள், பெண்களை பாலியல் தொந்தரவு செய்ததும், அவா்களிடமிருந்து நகை, பணம் மற்றும் கைப்பேசிகளை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, இதுதொடா்பாக 5 இளைஞா்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.