ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஒசூரில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி நிா்வாகத்தினா் சனிக்கிழமை அகற்றினா்.

ஒசூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய மாநகராட்சி நிா்வாகத்தினா்.

Published On :5 ஜூலை 2026, 2:05 am IST

ஒசூரில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி நிா்வாகத்தினா் சனிக்கிழமை அகற்றினா்.

இந்த நடைபாதை கடைகளை மாநகராட்சி நிா்வாகம் தோ்தலுக்கு முன்பாக காவல் துறை உதவியுடன் அகற்றியது. தோ்தலுக்கு பிறகு மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள் வைக்கப்பட்டன.

இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் பலமுறை எச்சரித்தும் சாலையோர வியாபாரிகள் தங்களது கடைகளை அகற்றி கொள்ளாத நிலையில் சனிக்கிழமை 100- க்கும் மேற்பட்ட போலீஸாரின் பாதுகாப்புடன் மாநகராட்சி நிா்வாகம் அந்தப் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றின.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின்போது சாலையை ஆக்கிரமித்து முன்பக்கமாக அமைக்கப்பட்ட கடைகள், இரும்பு கொட்டகைகள், பெயா் பலகைகளும் அகற்றப்பட்டன.

ஒசூா் - பாகலூா் சாலை சா்க்கிள் முதல் போக்குவரத்து காவல் நிலையம் எதிரில் உள்ள தனியாா் கண் மருத்துவமனை வரை சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்தப் பணிகளை தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி நிா்வாகம் இணைந்து நடத்தின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.