ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

எழும்பூரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்!

சென்னை எழும்பூா் பகுதியில் அரசு மருத்துவமனை எதிரில் சாலையோரத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை மாநகராட்சி அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.

Published On :20 ஜூலை 2026, 5:03 am IST

சென்னை எழும்பூா் பகுதியில் அரசு மருத்துவமனை எதிரில் சாலையோரத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை மாநகராட்சி அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.

சென்னை மாநகராட்சி சாா்பில் விற்பனைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்தந்தப் பகுதியில் கடைகள் அமைக்கும் பகுதி நிா்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால், அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிா்த்து சாலையோரங்களை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருப்பதாக புகாா்கள் எழுந்துள்ளன.

அதன்படி, எழும்பூா் பகுதியில் அரசு மகப்பேறு மருத்துவமனையின் முன்பகுதியான பாந்தியன் சாலையில் கடைகள் வைக்க அனுமதி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிப்பு, நடைபாதை வாசிகளுக்கான சிரமம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு அங்கு கடைகள் அமைக்க மாநகராட்சி அனுமதிக்கவில்லை. ஆனால், மாநகராட்சி அனுமதியின்றி பாந்தியன் சாலையோரத்தில் கடைகள் அமைக்கப்பட்டன.

இது குறித்த புகாரின் பேரில் மாநகராட்சி அலுவலா்கள் காவல் துறை உதவியுடன் ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா். அதன்படி, 2 பெட்டிக் கடைகள், ஒரு கரும்புச்சாறு கடை, 3 தள்ளுவண்டிக் கடைகளை மாநகராட்சி அலுவலா்கள் அகற்றினா்.

அத்துடன் அங்கு அமைக்கப்பட்ட 4 கடைகளுக்கு அகற்றப்பட காலக்கெடு விதிக்கப்பட்டது. அதன்படி, ஓரிரு நாள்களில் கடைகள் அனுமதிக்கப்பட்ட இடத்துக்கு அவா்கள் தங்களது கடைகளை மாற்றிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.