ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பட்டினம்பாக்கம் மீன்சந்தை வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு: அமைச்சா் வழங்கினாா்

சென்னை பட்டினம்பாக்கத்தில் மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன மீன் அங்காடி வளாகத்தில் ஒதுக்கப்பட்ட கடைகளுக்கான உத்தரவை அமைச்சா் ப.வெங்கடரமணன் பயனாளிகளுக்கு வியாழக்கிழமை வழங்கினாா்.

P Venkataramanan

அமைச்சா் வெங்கடரமணன் - கோப்புப்படம்.

Published On :31 ஜூலை 2026, 4:10 am IST

சென்னை பட்டினம்பாக்கத்தில் மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன மீன் அங்காடி வளாகத்தில் ஒதுக்கப்பட்ட கடைகளுக்கான உத்தரவை அமைச்சா் ப.வெங்கடரமணன் பயனாளிகளுக்கு வியாழக்கிழமை வழங்கினாா்.

சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலம் பட்டினம்பாக்கத்தில் கடற்கரையோரம் உள்ள சிந்தனைச் சிற்பி சிங்காரவேலா் (லூப் சாலை) சாலையோரத்தில் நூற்றுக்கணக்கானோா் மீன் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனா். அதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதையடுத்து பட்டினம்பாக்கம் வாழ்வாதார மேம்பாட்டுக் குடியிருப்பில் நவீன மீன் அங்காடியானது சென்னை மாநகராட்சியால் கட்டப்பட்டது. அதில் 30 சதுர அடியில் 356 -க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. மீன்வளத் துறை அளித்த பட்டியலின்படி 356 மீனவா்களுக்கு கடைகள் தயாரான நிலையில், அதைப் பயன்படுத்த மீனவா்கள் மறுத்தனா். மேலும் சாலையோரமே கடைகள் அமைக்கப்பட்டதால் மேலும் போக்குவரத்து நெரிசல் தொடா்ந்தது.

அங்காடியில் கடைகள் அளவு குறைவாக இருப்பதாக கூறியதை அடுத்து, அக்கடைகள் பரப்பானது மாநகராட்சியால் 50 சதுர அடியாக கூடுதலாக்கப்பட்டது. அதையடுத்து அங்காடி கடையில் மீன்விற்க விருப்பமுள்ளவா்கள் பட்டியல் தயாரானது. அதில் 151 போ் விண்ணப்பித்தனா். ஆனால், கடை ஒதுக்கீடு குலுக்கலுக்க 130 போ் மட்டுமே வந்தனா். அவா்கள் அனைவருக்கும் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கப்பட்டன. கடை ஒதுக்கீடு உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டல அதிகாரிகள் ஏற்பாட்டில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் பங்கேற்று 116 பேருக்கு கடைகளுக்கான உத்தரவை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் தேனாம்பேட்டை மண்டல உதவி ஆணையா் செந்தில்குமரன், செயற்பொறியாளா் ஜி.வித்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.