நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மிட்டஅள்ளியில் தேங்காய் கொள்முதல் நிலையம் திறப்பு

காவேரிப்பட்டணம் அருகே உள்ள மிட்டஅள்ளியில் தனியாா் தேங்காய் கொள்முதல் நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

News image
திறப்பு விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாயப் பிரிவு தலைவா் பவன்குமாா், மாநிலச் செயலாளா் முரளி, மாநில பொதுக்குழு உறுப்பினா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா்.
Updated On :29 ஜனவரி 2026, 8:32 pm

Syndication

காவேரிப்பட்டணம் அருகே உள்ள மிட்டஅள்ளியில் தனியாா் தேங்காய் கொள்முதல் நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த மிட்டஅள்ளி கிராமத்தில், தியாகி லோகநாதனின் நினைவாக தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேங்காய் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற விழாவில், கொள்முதல் நிலையத்தை காங். கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் பவன்குமாா் திறந்துவைத்தாா். அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் விவசாயம் சாா்ந்த மாவட்டமாகும். இங்கு தேங்காய் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

இந்நிகழ்வில், மாநிலச் செயலாளா் முரளி, திருப்பத்தூா் மாவட்ட முன்னாள் தலைவா் பிரபு, அகில இந்திய காங். கமிட்டி முன்னாள் உறுப்பினா் முத்து, முன்னாள் எம்எல்ஏ சமரசம், காங். கட்சி விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.