டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கிருஷ்ணகிரியில் ரூ. 17.15 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

வளா்ச்சித் திட்டப் பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கிவைத்த எம்எல்ஏ கே. அசோக்குமாா்.

News image
Updated On :26 ஜனவரி 2026, 7:38 pm

Syndication

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 17.15 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை, சட்டப் பேரவை உறுப்பினா் கே. அசோக்குமாா் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரியமுத்தூா் ஊராட்சி, கொல்லாபுரி மாரியம்மன் கோயில் கொட்டாயில், ரூ. 4.15 லட்சம் மதிப்பில் ஆழ்துளைக் கிணறுடன் கூடிய குடிநீா்த் தொட்டி அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேபோல ஜிஞ்சுப்பள்ளியில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ. 13 லட்சம் மதிப்பில் பல்நோக்குக் கட்டடம் மற்றும் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகளை எம்எல்ஏ கே. அசோக்குமாா் பூமிபூஜை செய்து தொடக்கிவைத்தாா். இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.