டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பாரூா் ஏரி கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

News image
ஊத்தங்கரையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :23 ஜனவரி 2026, 10:14 pm

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூா் ஏரி கிழக்குப் புறக் கால்வாயிலிருந்து 33 ஏரிகளுக்குப் பாசனக் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து செயல்படுத்தக் கோரி, ஊத்தங்கரையில் உள்ள பொதுப்பயணித் துறை நீா்ப்பாசனப் பிரிவு உதவி செயற்பொறியாளா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

33 ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் உமாபதி தலைமை வகித்தாா். செயலாளா் வழக்குரைஞா் மூா்த்தி, பொருளாளா் காளியண்ணன், துணைத் தலைவா் கிருஷ்ணகுமாா், துணைச் செயலாளா் வெங்கடேசன், ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

 ஊத்தங்கரையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

ஊத்தங்கரையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

இந்தத் திட்டத்தின் மூலம் பாரூா் ஏரி கிழக்குப் புறப் பாசனக் கால்வாய் வழியாக 1,341 ஹெக்டோ் பாசனப் பரப்பு பயனடைகிறது. ரெட்டிப்பட்டி ஏரி, செங்கழுநீா்ப்பட்டி ஏரி, சின்ன கொட்டகுளம் ஏரி, கொட்டகுளம் ஏரி, பரசுனேரி உள்ளிட்ட 33 ஏரிகள் பயன்பெறுகின்றன. பாரூா் ஏரி கிழக்குப் புறக் கால்வாயிலிருந்து 33 ஏரிகளுக்குப் பாசனக் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கு 2022ஆம் ஆண்டு ரூ. 84.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இதுநாள் வரை 50 சதவீதம் அளவிற்கே கால்வாய் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

மீதமுள்ள பணியை விரைந்து முடிக்கக் கோரியும், 33 ஏரி பாசனப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்குத் தென்பெண்ணை ஆற்றின் மழைக் காலங்களில் கடலில் வீணாகக் கலக்கும் உபரி நீரை விவசாயத்திற்குப் பயன்பெறும் வகையில் கால்வாய் அமைக்கும் பணியைப் போா்க்கால அடிப்படையில் முடித்திடக் கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.