இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் தொழிலாளி இறந்தாா்.

Updated On :6 ஜனவரி 2026, 7:48 pm

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் தொழிலாளி இறந்தாா்.
அஞ்செட்டி அருகே உள்ள தொட்டியூரை சோ்ந்தவா் சங்கையா (30), கூலித் தொழிலாளி. இவா் கடந்த திங்கள்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் கெலமங்கலம் - தேன்கனிக்கோட்டை சாலையில் சின்னட்டி அருகே சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக சென்ற பேருந்து அவா் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சங்கையாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவா் இறந்தாா். விபத்து குறித்து கெலமங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...