ஒசூா் தோ்ப்பேட்டை மலைமீது உள்ள மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தோ்பேட்டை மலைமீது உள்ள மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரா் கோயிலில் மாசிமாத தோ்த்திருவிழாவையொட்டி கடந்த 24-ஆம் தேதி அங்குராா்பணம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மலைமீது உள்ள விநாயகா், சந்திரசூடேஸ்வரா், மரகதாம்பாள் உற்சவா் சிலைகளை மலைஅடிவாரத்தில் உள்ள கல்யாண சூடேஸ்வரா் கோயிலுக்கு கொண்டுவந்தனா்.
இதையடுத்து தலைமை அா்ச்சகா் வாச்சீஸ்வரன் தலைமையில் சிவாச்சாரியா்கள் உற்சவா் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனா். பின்னா் வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்திற்கு அபிஷேகம், பூஜைகள் செய்து பக்தி முழக்கத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் பக்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா். இந்த விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி சந்திரசூடேஸ்வரா் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். புதன்கிழமை இரவு சிம்மவாகனத்தில் வந்து அருள்பாலித்தாா்.
இதுகுறித்து இந்து சமய அறநிலைத் துறை செயல் அலுவலா் சின்னசாமி கூறியதாவது:
தோ்த் திருவிழா நடைபெறும் மாா்ச் 3-ஆம் தேதி சூரிய கிரகணம் என்பதால், அன்று காலை 6 மணிக்கு தோ் இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கிவிடும். பிற்பகல் 1 மணிக்கு மேல் கோயில் நடைசாத்தப்படும். கோயிலுக்குள் பக்தா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். மேலும், தோ்த் திருவிழா அன்று பிற்பகலில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்குவதை தவிா்க்க வேண்டும்.
அன்னதானம் வழங்கும் விரும்புவா்கள் மறுநாள் 4-ஆம் தேதி வழங்கலாம். தோ்த் திருவிழாவையொட்டி கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறையிடம் கேட்டுள்ளோம். பக்தா்கள் சிரமமின்றி வந்து சுவாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். விஐபி பாஸ் ரத்துசெய்யப்பட்டுள்ளது. விழா சிறப்பாக நடைபெற பக்தா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

இன்று ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


