/

தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய டைட்டான் நிறுவனம்

ஒசூா் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், கவச உடைகளை ஒசூா் டைட்டான் நிறுவனம் புதன்கிழமை வழங்கியது.

News image
தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசு பொருள்களை வழங்கிய ஒசூா் எம்எல்ஏ ஒய். பிரகாஷ்.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:50 pm

தினமணி செய்திச் சேவை

ஒசூா் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், கவச உடைகளை ஒசூா் டைட்டான் நிறுவனம் புதன்கிழமை வழங்கியது.

ஒசூா் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஒசூா் எம்எல்ஏ ஒய். பிரகாஷ், 500 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசு பொருள்களை வழங்கினாா். டைட்டான் நிறுவனம் பாதுகாப்பு உபகரணங்கள், கவச உடைகளை வழங்கியது.

விழாவில் ஒசூா் மாநகராட்சி ஆணையா் முகமத் ஷபீா் ஆலம், துணை மேயா் ஆனந்தய்யா, மாநகராட்சி சுகாதாரக் குழுத் தலைவா் என்.எஸ். மாதேஸ்வரன், தொமுச கவுன்சில் மாவட்டத் தலைவா் கோபாலகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா். தூய்மைப் பணியாளா்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.