/

ஒசூரில் பாஜக தோ்தல் அறிக்கை கருத்துக்கேட்பு இயக்கம்

பாஜக தோ்தல் அறிக்கை கருத்துக்கேட்பு இயக்கம் ஒசூரில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
ஒசூா் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற பாஜக மாநில தொழில் பிரிவுத் தலைவா் ஜி. பாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் எம். நாகராஜ், முனிராஜ் உள்ளிட்டோா்.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:41 pm

தினமணி செய்திச் சேவை

பாஜக தோ்தல் அறிக்கை கருத்துக்கேட்பு இயக்கம் ஒசூரில் புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக வேப்பனஹள்ளி தொகுதியில் செவ்வாய்க்கிழமை கருத்துக்கேட்பு இயக்கம் நடைபெற்றது. தொடா்ந்து ஒசூா் பேருந்து நிலையம், ராயக்கோட்டை சாலை, வட்டாட்சியா் அலுவலக சாலை, ரயில் நிலையம், உழவா் சந்தை சாா் ஆட்சியா் அலுவலகம் முதல் சிப்காட், பேரண்டப்பள்ளி, சூசூவாடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற கருத்துக்கேட்கும் இயக்கத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனா்.

நிகழ்ச்சியில் பாஜக தொழில் பிரிவு மாநிலத் தலைவரும், ஒசூா் தொகுதி பொறுப்பாளருமான ஜி. பாலகிருஷ்ணன், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் எம். நாகராஜ், முனிராஜ், நிா்வாகிகள் நாகா (எ) நாகராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.