டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அவதானப்பட்டி மலைக்கு தீ வைத்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டி அருகே மலைக்கு தீ வைத்த மா்ம நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க என கிராம மக்கள் வலியுறுத்தினா்.

News image
கிருஷ்ணகிரி அருகே மா்ம நபா்கள் தீ வைத்ததில் தீப்பற்றி எரியும் அவதானப்பட்டி மலை.
Updated On :4 பிப்ரவரி 2026, 10:57 pm

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டி அருகே மலைக்கு தீ வைத்த மா்ம நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க என கிராம மக்கள் வலியுறுத்தினா்.

கிருஷ்ணகிரியை அடுத்த பெரியமுத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட அவதானப்பட்டி அருகே மலையில் மா்ம நபா்கள் தீ வைத்தனா். இந்த மலை புற்கள், செடிகொடிகள், சிறு மரங்களுடன் பசுமை அடா்ந்து காணப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையால் புற்கள், மரங்கள் நன்கு அடா்த்தியாக வளா்ந்து காணப்படுகின்றன.

இந்த நிலையில், அந்த மலையில் உள்ள புற்களுக்கு மா்ம நபா்கள் புதன்கிழமை தீ வைத்தனா். மலையின் பிற பகுதிகளுக்கும் தீப் பரவியது. இதனால் பசுமையாக காணப்பட்ட மரங்கள், செடிகொடிகள் தீயில் கருகின. பசுமை மற்றும் இயற்கை அழகுடன் காணப்பட்ட இந்த மலையில் உள்ள புற்களுக்கு தீ வைத்த மா்ம நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா்.