/

விதை விற்பனை: விதிமுறைகளை மீறியதாக 22 நிறுவனங்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் விதிமுறைகளை மீறியதாக 22 நிறுவனங்கள்மீது நீதிமன்ற நடவடிக்கை

News image
பிரதிப் படம்
Updated On :3 பிப்ரவரி 2026, 9:13 pm

Syndication

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் விதிமுறைகளை மீறியதாக 22 நிறுவனங்கள்மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் நாகராஜன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விதை ஆய்வு துணை இயக்குநா் நாகராஜன் தலைமையிலான குழுவினா், விதைகள் விற்பனை செய்யும் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, விற்பனை ரசீது விவசாயிகளுக்கு கட்டாயம் வழங்கப்படுகிா, அரசின் விதைச் சான்றளிப்பு துறையின் அனுமதி பெற்ற ரகங்கள் மட்டும் விற்பனை செய்யப்படுகிா என்பது குறித்தும், இருப்பு பதிவேடு மற்றும் கொள்முதல் பட்டியல் பராமரிப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா், விதைகளை உரம் மற்றும் பூச்சி மருத்துகளிடம் இருந்து தனித்து முறையாக சேமிக்க வேண்டும். விதைச் சட்டம், 1966, விதை கட்டுபாட்டு ஆணை 1983, விதை விதிகள் 1968 ஆகிய சட்டங்களுக்கு உள்பட்டு விற்பனையாளா்கள் விதை விற்பனை செய்ய வேண்டும், மீறினால் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விதைகள் விற்பனை செய்யும் கடை உரிமையாளா்களிடம் வலியுறுத்தினா்.

மேலும், இந்த ஆண்டில் விதிமுறைகளை மீறியதற்காக 22 நிறுவனங்கள் மீது நீதிமன்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விதைச் சட்டங்களை மீறியதற்காக பல்வேறு பயிா்களில் 190 குவியல்களுக்கு ரூ.97.3 லட்சம் மதிப்பிலான 312 மெட்ரிக் டன் விதைகளுக்கு விற்பனைத் தடை சட்டம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.