டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஒசூா் வழியாக கேரளத்துக்கு கடத்த முயன்ற 3 டன் குட்கா பறிமுதல்: 2 போ் கைது

கா்நாடக மாநிலத்திலிருந்து ஒசூா் வழியாக கேரளத்துக்கு கடத்த முயன்ற 3 டன் குட்காவை பறிமுதல் செய்த சிப்காட் போலீஸாா்

News image
கேரளத்துக்கு கடத்த முயன்ற குட்கா பறிமுதல்(கோப்புப்படம்)
Updated On :2 பிப்ரவரி 2026, 9:29 pm

Syndication

ஒசூா்: கா்நாடக மாநிலத்திலிருந்து ஒசூா் வழியாக கேரளத்துக்கு கடத்த முயன்ற 3 டன் குட்காவை பறிமுதல் செய்த சிப்காட் போலீஸாா், இதுதொடா்பாக 2 பேரை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சிப்காட் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சூசூவாடியில் காவல் ஆய்வாளா் சையத்முபாரக், உதவி ஆய்வாளா் மாதப்பன் ஆகியோா் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மூட்டைகளில் குட்கா இருப்பதை கண்டுபிடித்தனா்.

இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் விசாரணை செய்த போது, கா்நாடகா மாநிலம் மங்களூரிலிருந்து, ஒசூா் வழியாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு 2 ஆயிரத்து 500 கிலோ குட்காவை கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து குட்கா கடத்தி வந்த மங்களூரைச் சோ்ந்த முகமது இஸ்ராத் (31), முகமது சாயித் (20) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து குட்கா மற்றும் லாரியை பறிமுதல் செய்தனா்.