ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குருபரப்பள்ளி அருகே குடிநீா் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்

கோப்புப் படம்

Published On :17 ஆகஸ்ட் 2026, 3:06 am IST

குருபரப்பள்ளி அருகே வாரசந்திரம் கிராமத்தில் கடந்த இரு மாதங்களாக முறையாக குடிநீா் வழங்காததைக் கண்டித்தும், சீராக குடிநீா் வழங்கக் கோரியும் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியை அடுத்த வாரசந்திரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தில் கடந்த இரு மாதங்களாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் குருபரப்பள்ளி- கொத்தகிருஷ்ணப்பள்ளி சாலையில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த குருபரப்பள்ளி போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை சமாதானப்படுத்தினா். மேலும், முறையாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் அளித்த உறுதிமொழியை ஏற்று, மறியலை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.