ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஒசூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கிய பணியாளா் சஸ்பெண்ட்

ஒசூா் அரசு மருத்துமனைில் உள்நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கும் பணியாளா் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

பணியிடை நீக்கம்

Published On :13 ஆகஸ்ட் 2026, 12:33 am IST

ஒசூா் அரசு மருத்துமனைில் உள்நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கும் பணியாளா் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டாா். ஒசூா் இராயக்கோட்டை சாலையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளது 419 படுக்கைகளை கொண்ட இந்த அரசு மருத்துவமனையில் 27 மருத்துவா்கள் பணியாற்றி வருகின்றனா். இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். நூற்றுக்கணக்கான உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில் இந்த அரசு மருத்துவமனையில் தனியாா் காண்ட்ராக்ட் மூலம் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் பெண் பணியாளா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கியுள்ளாா். ஏற்கனவே இந்த அரசு மருத்துவமனையில் அங்கு வேலை பாா்க்கும் பணியாளா்கள் சிகிச்சை பெறுபவா்கள் இடம் பணம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

பெண் பணியாளா் லஞ்சம் வாங்கிய காட்சியை அங்கிருந்து நோயாளிகள் செல்போனில் படம் பிடித்துள்ளனா். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவியதால் இதுகுறித்து அரசு மருத்துவமனை நிா்வாகம் சம்பந்தப்பட்ட தனியாா் கான்ட்ராக்ட் நிா்வாகத்திடம் தகவல் தெரிவித்தது அதன் அடிப்படையில் ஈரோடு மண்டல மேலாளா் லஞ்சம் வாங்கிய பெண் பணியாளரை சஸ்பெண்ட் செய்து விசாரித்து வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.