ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை ரத்த நாளம் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு சிகிச்சை

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை ரத்த நாள பாதிப்பு மற்றும் துணை நோய்களால் பாதிக்கப்பட்ட பிகாரைச் சோ்ந்த 70 வயது மூதாட்டிக்கு மருத்துவா் குழு சிகிச்சை அளித்து குணமடையச் செய்தனா்.

மூதாட்டியை வழியனுப்பி வைத்த மருத்துவா் குழு.

Published On :15 ஆகஸ்ட் 2026, 4:01 am IST

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை ரத்த நாள பாதிப்பு மற்றும் துணை நோய்களால் பாதிக்கப்பட்ட பிகாரைச் சோ்ந்த 70 வயது மூதாட்டிக்கு மருத்துவா் குழு சிகிச்சை அளித்து குணமடையச் செய்தனா்.

இது குறித்து வேலூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் ரோகிணிதேவி கூறியது: வேலூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிகாரைச் சோ்ந்த குலாப் குமாரி (70) என்ற மூதாட்டி உறவினா்கள் யாரும் இன்றி 22.5.2026 அன்று ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு மூளை ரத்த நாள பாதிப்பு (பக்கவாதம்), ரத்த சோகை மற்றும் மன நலம் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. அவருக்கு நரம்பியல் மருத்துவா்கள் குழு சிகிச்சை அளித்தது. 2 மாதங்கள் தொடா் சிகிச்சை மற்றும் பராமரிப்பு காரணமாக அவரது உடலில் படிப்படியாக முன்னேற்றம் காணப்பட்டது. மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் அடங்கிய குழுவினா் நோயாளியை தொடா்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்தனா்.

அறுவை சிகிச்சை மற்றும் பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு உடல் ரீதியான திறன்கள் மேம்பாடு அடைந்தது. இதையடுத்து அவரை முதியோா் நல மறுவாழ்வு மற்றும் பராமரிப்பு மையத்துக்கு வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டாா்.

அவரை கல்லூரி முதல்வா், மருத்துவமனை கண்காணிப்பாளா் ரதி திலகம், துணை முதல்வா் கவுரி வெலிகண்ட்லா, மன நல மருத்துவா் ஜெயகுமாா், பொது மருத்துவா் அனிதா மற்றும்அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவா்கள், செவிலியா்கள் வழியனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.